Skip to main content

விலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! சியோமி சரவெடி.!

 எனவே

அன்மையில் சியோமி நிறுவனம் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை சீனாவில் அறிமுகம் செய்ததை தொடர்ந்து, மீண்டும் சியோமி நிறுவனம் புதிய 32-இன்ச்(Mi TV Pro E32S) ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.
 
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. அதன்படி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி மி டிவி ப்ரோ இ32எஸ்(Xiaomi Mi TV Pro E32S) ஸ்மார்ட் டிவி மாடல் 899 யுவான்(இந்திய மதிப்பில் ரூ.9,500) ஆக உள்ளது. குறிப்பாக இந்த புதிய 32-இன்ச் சியோமி டிவி மாடல் ஆனது விரைவில் அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய சியோமி மி டிவி ப்ரோ இ32எஸ் மாடல் ஆனது 32-இன்ச் டிஸ்பிளேவுடன் 1920 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. கொரோனா தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த இயல்பு வாழ்க்கைக்கு போக முடியுமா? சுந்தர் பிச்சை கருத்து.! சியோமி மி டிவி ப்ரோ இ32எஸ் மாடல் குவாட்-கோர் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-53 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. 

 XiaoAI அசிஸ்டெண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது

பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட பேட்ச்வாலில் இயங்குகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆனது 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் XiaoAI அசிஸ்டெண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி மி டிவி ப்ரோ இ32எஸ் ஸ்மார்ட் டிவி மாடல். சியோமி மி டிவி ப்ரோ இ32எஸ் மாடல் புளூடூத் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் 12கீ ஆதரவைக் கொண்டுள்ளது. 

மேலும் இது உள்ளமைக்கப்பட்ட Chromecast ஆதரவுடன் வருகிறது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல். Realme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன? இந்த சியோமி டிவியின் ஆடியோ பற்றி பேசுகையில், 6W ஸ்பீக்கர்கள் மற்றும் அதன் டிடிஎஸ் டிகோடர் ஆதரவையும் கொண்டுள்ளது 

இந்த சாதனம். மேலும் கருப்பு வண்ணத்தில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் கிடைக்கும்.  இரண்டு எச்.டி.எம்.ஐ போர்ட்கள், ஒரு யூ.எஸ்.பி போர்ட், ஒரு ஏ.வி உள்ளீடு, ஒரு எஸ்.பி.டி.எஃப் போர்ட், ஒரு ஆண்டெனா போர்ட், புளூடூத் 4.0 மற்றும் வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது சியோமி மி டிவி ப்ரோ இ32எஸ் மாடல்.


Comments