Skip to main content

ரெட்மி இயர்பட்ஸ் எஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது


Redmi  அதன் புதிய இயர் பட்ஸ் 1800 கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி இயர்பட்ஸ் எஸ் மாடலை அறிமுகம் செய்தது. தற்சமயம் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் ரெட்மி இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த இயர்போன்கள் நான்கு மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் சார்ஜிங் கேஸ் பேட்டரி திறனை சேர்க்கும் போது 12 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, ரியல்டெக் RL8763BFR ப்ளூடூத் சிப் கொண்டு என்விரான்மென்ட்டல் நாய்ஸ் ரிடக்ஷன் வசதியை வழங்குகிறது. 

முன்னதாக இதே இயர்போன் ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ் எனும் பெயரில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 1100 என நிர்ணயம் செய்யப்பட்டது.

Comments