Skip to main content

64 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா: ஹூவாய் மைமாங்க் 9 ஜூலை 27!

ஹூவாய் மைமாங் 9 ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்போடு கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூவாய் அடுத்த மாடல்

ஹூவாய் அடுத்த மாடல்

சீன உற்பத்தி நிறுவனமான ஹூவாய் அடுத்த மாடல் குறித்து வெய்போவில் தகவல் வெளியாகியுள்ளது. அது ஹூவாய் நிறுவனத்தின் மைமாங் 9 ஐ ஸ்மார்ட்போனாக இருக்கக் கூடும் எனவும் அதுகுறித்த அறிவிப்பு ஜூலை 27 ஆம் தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

64 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா

64 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா

இந்த ஸ்மார்ட்போனானது 64 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா அமைப்போடு வெளியிடப்படும் என டீஸர் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஹானர் ப்ளே 5ஜி ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இது இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூவாய் மைமாங் 9 விவரக்குறிப்புகள்

ஹூவாய் மைமாங் 9 விவரக்குறிப்புகள்

ஹூவாய் மைமாங் 9 ஸ்மார்ட்போனானது 6.8 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வடிவமைப்போடு 1080 x 2400 மற்றும் 20: 9 விகித டிஸ்ப்ளேயுடன் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 2.0GHz ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 800 (MT6873) 7nm செயலி மூலம் இயக்கப்படும் எனவும் இது 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்டுகளில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போனானது 64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி சேமிப்பு விருப்பத்துடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது.

முன்புற கேமரா அமைப்பு

முன்புற கேமரா அமைப்பு

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பானது 64 மெகாபிக்சல் பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சாருடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது. அதோடு 8 மெகாபிக்சல் செல்பி கேமரா ரகத்துடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு EMIUI 10.1 உடன் இயங்கும் மற்றும் 4300mAh பேட்டரியை 22.5w வேகமாக சார்ஜ் செய்யும். 70 x 78.5 x 8.9 மிமீ அளவும் இதன் எடை 212 கிராமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

என்ஜாய் 20 ப்ரோ

என்ஜாய் 20 ப்ரோ

சமீபத்தில் ஹூவாய் நிறுவனம் தனது அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை என்ஜாய் 20 ப்ரோவில் வழங்கியது. இரண்டு வேரியண்டுகளில், மூன்று தனித்துவ வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.

ஹூவாய் 20 ப்ரோ



  • ஹூவாய் 20 ப்ரோ

ஹூவாய் 20 ப்ரோ ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்டுகளில் வருகிறது. அது 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம். 6 ஜிபி ரேம் மாடலிந் விலை சிஎன்ஒய் 1,999 அதாவது இந்திய ரூபாயின் மதிப்பின்படி ரூ.21,500 ஆக இருக்கும் என தெரிகிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மாடல் விலை சிஎன்ஒய் 2,299 இந்திய ரூபாயின் மதிப்பின்படி ரூ.24,800 ஆக விற்கப்படும் என தகவல்கள் தெரிவித்தது.

Comments